“பணக்காரன் தான் இந்த பிச்சைக்காரன்” ; புதிரை விடுவித்த விஜய் ஆண்டனி..!

211

Pichaikkaran-24

வரும் மார்ச்-4ஆம் தேதி ரிலீஸாவதற்கு தேவையான முன்னேற்பாடுகளுடன் பக்காவாக தயாராகிவிட்டது விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘பிச்சைக்காரன்’.. விஜய் ஆண்டனியை சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய இயக்குனர் சசி தான், இந்தப்படத்தை இயக்கியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.. படம் விரைவில் வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தனர் விஜய் ஆண்டனியும் இயக்குனர் சசியும்.

அப்போது பேசிய விஜய் ஆண்டனி, “இந்தப்படத்தின் டைட்டில் பிச்சைக்காரன் என இருந்தாலும், நான் பிச்சைக்காரனாகவே நடித்திருந்தாலும் இது உண்மையில் ஒரு பணக்காரனை பற்றிய கதை.. அவன் ஏன் பிச்சைகாரனாக மாறவேண்டி வந்தது என்பது கொஞ்சம் மனதை நெகிழ வைக்கும் விதமாக அதே சமயம் தேவையான ஆக்சனுடன் உருவாகியுள்ளது” என கூறினார்..

இவரது முந்தைய படங்களில் ஹிட்டடித்த ‘மக்கயாலா’, ‘மஸ்காரா’ டைப் பாடல் எதுவும் இதில் இருக்கிறதா என்கிற கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது. ஆனால் அப்படி ஒரு பாடல் இல்லை என்றும், இயக்குனர் சசி கூட தன்னிடம் அப்டி ஒரு பாடலை வைக்கலாமா என கேட்டபோது, கதைக்கு தேவைப்படலையே, அதனால் வேண்டாம் என சசியிடம் சொல்லிவிட்டாராம் விஜய் ஆண்டனி.

Comments are closed.