ஒருநாள் கூத்தில் இடம்பெற்ற 200 வருட பழமையான பாடல்..!

213

orunaal koothu
அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘ஒருநாள் கூத்து’ படத்துக்கு இசையமைத்துள்ளவர் ஜஸ்டின் பிரபாகரன். இப்படத்தில் கோபால கிருஷ்ண பாரதியார் எழுதிய இருநூறு வருடம் பழமையான பாடலான ‘எப்போ வருவாரோ’ பாடல் இடம்பெற்றுள்ளது இப்பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு மிகவும் இனிமையான இசையை இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் கொடுத்துள்ளாராம்.

இந்தப்படத்தின் கதாநாயகிகளாக மியா ஜார்ஜ், துபாய் அழகி நிவேதா மற்றும் ‘மெட்ராஸ்’ ரித்விகா நடிக்க, முக்கிய வேடங்களில் கருணாகரன், ரமேஷ் திலக், பாலசரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். நெல்சன் வெங்கடேசன் என்பவர்தான் படத்தை இயக்கியிருக்கிறார். கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் தயாரிப்பில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

Comments are closed.