
தற்போது உதயநிதி நடித்துவரும் ‘மனிதன்’ இந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஜாலி எல்எல்பி’ என்கிற படத்தின் ரீமேக் ஆகும்.. இந்தப் படத்தின் கதை முற்றிலும் நீதிமன்ற பின்னணியில் நடக்கிறது.. ஆறு அப்பாவி தொழிலாளர்களின் நலனுக்காக வாதாடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் உதயநிதி நடிக்க இருக்கிறார். அதனால் தான் படத்திற்கு மிக பொருத்தமாக ‘மனிதன்’ என ரஜினி பட டைட்டிலை கேட்டு வாங்கி வைத்துள்ளார்கள்.
‘என்றென்றும் புன்னகை’ படத்தை தொடர்ந்து இயக்குனர் அஹமது இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தியிலிருந்து தமிழுக்கு மாற்றுவதால் நம்ம ஊருக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்துள்ளார்களாம். இந்தப்படத்தின் கதாநாயகியாக மீண்டும் உதயநிதியுடன் இணைந்து ஹன்சிகா நடிக்கிறார்.
மேலும் இந்தப்படத்தில் பிரகாஷ்ராஜ், ராதாரவி, ‘ஆரம்பம்’ புகழ் அக்சரா ஆகியோர் நடிக்கின்றனர். அதுமட்டுமல்ல, தொடர்ந்து தனது மூன்று படங்களில் சந்தானத்துடனும் ‘கெத்து’ படத்தில் கருணாகரனுடன் காமெடிக்கூட்டணி அமைத்த உதயநிதி, இந்தப்படத்தில் விவேக்குடன் முதன்முறையாக கூட்டணி சேந்திருக்கிகிறார்.
Comments are closed.