விஜய் ஆண்டனியின் ‘யமன்’ படப்பிடிப்பு இன்று துவங்குகிறது..!

220

vijay antony - jeeva sangar combo in yeman
ஒருபக்கம் ரஜினி, கமல் என பெரிய நட்சத்திரங்களுடன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் லைக்கா நிறுவனம் இன்னொரு பக்கம் சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் வெறிக்கு உத்தரவாதம் உண்டு என நம்பினால் தாமதிக்காமல் உடனே அந்தப்படத்தை ஆரம்பித்து விடுகின்றது. அப்படி உருவாக்க இருக்கும் படம் தான் ‘யமன்’..

‘நான்’ படம் மூலம் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு ஹீரோ அந்தசத்தை பெற்று தந்ததோடு, மேக்கிங்கிலும் கவனிக்க வைத்தவர் ஜீவா சங்கர்.. இந்த ‘யமன்’ படத்தில் மீண்டும் இந்த இருவர் கூட்டணி இணைகிறது. விஜய் ஆண்டனியின் வளர்ச்சியை நாங்கள் எங்களது நிறுவனத்தின் சார்பில் கூர்ந்துக் கவனித்து வருகிறோம். அதனாலேயே இந்தப்படத்தை தயாரிக்கும் பொறுப்பு எங்களிடம் வந்தபோது நாங்கள் சற்றும் தயங்கவில்லை என்கிறார் லைக்கா நிர்வாகிகளில் ஒருவரான ராமலிங்கம்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.

Comments are closed.