பிப்-14ல் கோவையில் ‘போக்கிரி ராஜா’ இசை வெளியீடு…!

271

pokiri-raja
இந்த 2016ஆம் வருடம் ஜீவாவுக்கு ‘போக்கிரி ராஜா’ படத்துடன் இனிதே ஆரம்பிக்க இருக்கிறது.. ரஜினி டைட்டில் சென்டிமென்ட், ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பாவின் இரண்டாவது படம், ஜீவாவின் 25வது படம் என படத்திற்கு வலுசேர்க்கும் சில அம்சங்களும் உள்ளன.. ஜீவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா வேறு நடிக்கிறார்.. வில்லனாக சிபிராஜ் நடிக்கிறார்.. இது போதாதா..?

இந்தப்படத்தை வரும் பிப்-26ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அதற்கு முன்னதாக படத்தின் ஆடியோ ரிலீஸை காதலர் தினமான பிப்-14 அன்று கோவையில் வைத்து நடத்த இருக்கிறார்கள். படத்தை வெளியிடும் காஸ்மோ வில்லேஜ் நிறுவனம் கோவையை சேர்ந்தது என்பதுடன் சிபிராஜின் ரசிகர்கள் அதிகம் உள்ள பகுதி என்பதாலும் கோவையை தேர்ந்தெடுத்துள்ளார்களாம்.

Comments are closed.