“எந்நேரமும் அதிர்ஷ்டம் மட்டுமே கை கொடுக்காது” ; நிவின்பாலி

243

nivin pauly
மலையாள சினிமாவின் இளம் நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்துவிட்டார் நடிகர் நிவின்பாலி.. கடந்த மூன்று வருடங்களில் இவர் நடித்த ஒன்றிரண்டு படங்களை தவிர மற்ற படங்கள் எல்லாமே ஹிட், சூப்பர் ஹிட், பிளாக் பஸ்டர் ஹிட் வகையை சேர்ந்தவை தான். இதற்கு காரணம் திறமையா, அதிர்ஷ்டமா என கேட்டால் நிச்சயம் திறமை தான் என்கிறார் நிவின்பாலி..

அதிர்ஷ்டம் எப்போதும் நமக்கு கைகொடுத்துக்கொண்டே இருக்காது… கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்வதிலும் நூறு சதவீதம் அதில் நம்மை பொருத்திக்கொள்ளும் திறமையிலும் தான் வெற்றியை தக்கவைக்க முடியும் என்கிறார் நிவின்பாலி..

நேரம் பட வெற்றிக்கு பின்னர் தமிழ்சினிமா பக்கம் வராமல் மலையாளத்திலே பிசியாகிவிட்ட நிவின்பாலி இப்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார்.. இந்தப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் என்பவர் இயக்குகிறார். இவர் மிஷ்கினிடம் முகமூடி படத்தில் உதவி இயக்குனராகவும் செகண்ட் யூனிட் டைரக்டராகவும் வேலை பார்த்தவர்.

Comments are closed.