சஞ்சிதா ஷெட்டிக்கு அடித்த ஜாக்பாட்..!

299

Sanchita-Shetty
‘கொள்ளைக்காரன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானாலும் ‘சூதுகவ்வும்’ படத்தில் பளிச்சென ரசிகர்களின் கவனம் ஈர்த்த சஞ்சிதா ஷெட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது திடீரென அவருக்கு மலையாளத்தில் நடிக்கும் எதிர்பாராத வாய்ப்பு தேடி வந்துள்ளது.. அதுவும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கு ஜோடியாக.

இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளவர் இயக்குனர் பிரியதர்ஷன்.. மோகன்லாலை வைத்து தான் இயக்கவுள்ள ‘ஒப்பம்’ என்கிற படத்தில் தான் சஞ்சிதாவுக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார்.. க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தில் மோகன்லால் கண்பார்வையற்றவராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.