பிப்-12ல் மிரட்ட வருகிறான் ‘மிருதன்’..!

204

miruthan 1
கடந்த வருடம் தொடர் வெற்றிகளை குவித்து தமிழ்சினிமாவில் தனது இடத்தை அசைக்கமுடியாதவாறு தக்கவைத்துள்ள ஜெயம் ரவி, 2016ல் தனது முதல் படமாக ‘மிருதன்’ படத்தை ரிலீஸ் செய்கிறார்.. ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க, மைக்கேல் ராயப்பன் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.

ஜெயம் ரவியின் தொடர் வெற்றியும், ‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றிப்பட இயக்குனரான சக்தி சௌந்தர்ராஜன் இந்தப்படத்தை இயக்கியுள்ளதும், படம் பிக்சன் வகையை சேர்ந்ததும் என எல்லாமுமாக சேர்ந்து பலவிதங்களில் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறான் இந்த ‘மிருதன்’.. வரும் பிப்-12ல் இந்தப்படம் ரிலீஸாகிறது.

Comments are closed.