ஜனவரி இறுதியில் நயன்தாராவின் படம் ரிலீஸ்..!

209

puthiya-niyamam release

கடந்த வருடம் கதாநாயகனாக ஜெயம் ரவிக்கும் கதாநாயகியாக நயன்தாராவுக்கும் மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்த வருடமாக அமைந்துவிட்டது.. அதேபோல இந்த வருடத்திலும் நயன்தாராவின் வெற்றிப்பயணம் தடையில்லாமல் தொடரும் என்பது அவர் நடித்து வரும் படங்களை பார்த்தாலே தெரிகிறது.

தமிழில் கார்த்தியுடன் காஷ்மோரா’, விக்ரமுடன் ‘இருமுகன்’, ஜீவாவுடன் ‘திருநாள்’ மற்றும் சிம்புவுடன் இது நம்ம ஆளு’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இருந்தாலும் இந்த புத்தாண்டு பிறந்த முதல் மாதத்தில் நயன்தாராவின் படம் ஒன்று ரிலீசானால் நன்றாக இருக்கும் தானே.. அதனால் தமிழில் அந்த வாய்ப்பு இல்லாவிட்டாலும் மலையாளத்தில் மம்முட்டியுடன் இவர் நடித்துல் ‘புதிய நியமம்’ படம் வரும் ஜனவரி-29ல் ரிலீசாகிறது.. எனவே ரசிகர்களே உற்சாகத்துக்கு தயாராக இருங்கள்.

Comments are closed.