டோனி ஜா அதிரடியாக கலக்கும் ‘கும்கிவீரன்’

212

உலகளவில் ஆக்‌ஷன் ஹீரோக்களுக்கு மிக பெரிய வரவேற்பு எப்போதுமே உண்டு. உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆக்‌ஷன் ஹீரோக்களின் வரிசையில் புருஸ்லீ, ஜாக்கிசான், ஜெட்லீ ஆகியோருக்குப் பிறகு டோனிஜா முக்கியமான இடத்தில் இருக்கிறார். டோனிஜா ஏற்கனவே நடித்து சூப்பர் ஹிட் ஆன ‘ஓங் பேக்-1’ என்ற படம் உலக அளவில் மாபெரும் வசூல் புரட்சியை ஏற்படுத்தியது.

தற்போது பத்து வருடங்களுக்குப் பிறகு ‘ஓங் பேக்-1’ படத்தில் இணைந்து பணியாற்றியிருந்த இயக்குனர் பிரச்சாய் பிங்கே, ஸ்டண்ட் இயக்குனர் கிட்டிகேரி, டோனிஜா மூவரும் இணையும் படம் Tom Yum Goong 2. இந்தப்படம் தான் ‘கும்கிவீரன்’ என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது.

‘ஓங் பேக்’ எப்படி ஆக்‌ஷன் படமாக பேசப்பட்டதோ அதற்கு இணையாக ‘கும்கி வீரன்’ படமும் ஆக்‌ஷன் விஷயத்தில் பரபரப்பாகப் பேசப்படும். குறிப்பாக 20 நிமிடம் ஓடும் பைக் சேசிங் காட்சிகளை படமாக்கிய விதத்தில் மிரட்டியிருக்கிறார்களாம்.

இந்தோ ஓவர்சிஸ் நிறுவனம் சார்பாக பிரோஸ் மற்றும் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் இந்தப்படத்தை தமிழில் வெளியிடுகிறார்கள். இவர்கள் ஏற்கனவே ஜாக்கிசான் நடித்த சி.இசட்-12 என்ற படத்தை வெளியிட்டவர்கள் தான்.

Leave A Reply

Your email address will not be published.