ஹேப்பி பர்த்டே எஸ்.பி.பி.சரண்..!

242

spb charan
தந்தை எஸ்.பி.பாலசுப்ரமணியனைப் போலவே அவரது மகன் சரணும் நல்ல திறமைசாலிதான். ஒரு பின்னணி பாடகராக மட்டுமின்றி, தயாரிப்பு, நடிப்பு என ஒவ்வொரு துறையிலும் கால் தடம் பதித்தவர். தன் தந்தையைப்போல பின்னணி பாடகராக மட்டுமே புகழ்பெற விரும்பாத சரண் ஒரு நல்ல தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவே அதிகம் விரும்புகிறார்.

வெங்கட்பிரபு சொன்ன ‘சென்னை-28’ கதையில் நம்பிக்கை வைத்து அந்தப்படத்தை தயாரித்து, அவர் முன்னணி இயக்குனராக வலம் வர பாதை போட்டுக்கொடுத்தவர் சரண். அதேபோல இயக்குனர் சமுத்திரக்கனிக்கும் ‘உன்னை சரணடைந்தேன்’ படம் மூலம் முதல் படி இவர் அமைத்து தந்ததுதான். இவரது பெயரை தமிழ்சினிமா நினைவு கூற இவர் தயாரித்த ‘ஆரண்ய காண்டம்’ என்ற ஒரு படம் போதும்.

இன்று பிறந்தநாள் காணும் சரணுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.