விஜய்யின் 6௦வது படத்தை தயாரிப்பது விஜயா புரொடக்‌ஷன்ஸ் தான்..!

227

vijay_MKW_23_12
தற்போது விஜய் தனது 59வது படத்தில் அட்லீ டைரக்சனில் பிசியாக நடித்துவருகிறார். இதை தொடர்ந்து விஜய்யின் 60 வது படத்தை இயக்கவிருப்பது யார்? என்கிற கேள்வி விஜய் ரசிகர்களிடையே ஓட ஆரம்பித்திருக்கிறது. இதற்குமுன் விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன்தான் இந்த படத்தை இயக்கப் போகிறார் என்கிற செய்தியும் வெளியானது.

இப்போது. விஜயா புரடக்சன்ஸ் நிறுவனம் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.. ஆம் விஜய்யின் 6௦வது படத்தை தயாரிப்பது இந்த நிறுவனம்.. தனுஷின் வேங்கை, அஜித்தின் வீரம் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் படத்தை தயாரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.