
‘உன்னைப்போல் ஒருவன்’, ‘இவன் வேற மாதிரி’ படங்களில் போலீஸ் அதிகாரியாக மிரட்டியவர் கணேஷ் வெங்கட்ராம். இந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான ‘அச்சாரம்’ படத்தில் கூட போலீஸ் அதிகாரியாக, மனம் நிறைய கல்யாண கனவுகளுடன் மணப்பெண் தேடும் நாயகனாக நடித்திருந்தார்.
அதேபோல சில மாதங்களுக்கு முன், நிஜ வாழ்வில் தான் கரம் பிடிக்கப்போகும் தனது ‘நாயகி’யையும் கண்டுபிடித்து திருமணத்துக்கு ‘அச்சாரம்’ போட்டார் கணேஷ் வெங்கட்ராம். மணப்பெண்ணின் பெயர் நிஷா. வரும் நவ-22ல் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்குமுன் தனது வருங்கால மனைவியுடன் சினிமா பாணியில் ஒரு போட்டோஷூட்டும் நடத்தி புதுமை படைத்துள்ளார் கணேஷ் வெங்கட்ராம்.
Comments are closed.