“கமலுக்கு அடுத்து சூர்யா தான்” – மனம் திறந்த கௌதம் மேனன்..!

187

Suriya-and-gautham-menon
எப்போதும் காலநிலை ஒரே போல இருக்காது அல்லவா..? வெயில் திக்கிக்கும் கோடை காலம் போய் வசந்த காலம் வந்துதானே தீரவேண்டும்.. அதேபோலத்தான் தனகளுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை ஒதுக்கித்தள்ளிவிட்டு சூர்யாவுடன் இணக்கமான நட்புக்கரம் நீட்டியுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.. அதன் வெளிப்பாடு தான் சமீபத்தில் சூர்யாவை பற்றி கமலுடன் ஒப்பிட்டு அவர் பாராட்டியது.

“சூர்யா பண்ணும் நிறைய விஷயங்கள் வேறு யாருமே பண்ண முடியாது. படப்பிடிப்பு தளத்தில் என்ன சொன்னாலும் செய்வார்.. நிறைய இளம் நடிகர்கள் இருக்கிறார்கள், ஆனால் சூர்யா மாதிரியான கலைநயம் மிக்கவர் யாருமே இல்லை. உண்மையில் கமல் சார் படம் பண்ணும் போது இருக்கும் உணர்வு சூர்யா படம் பண்ணும் போது தான் இருக்கிறது. அதை நான் ஏன் இழக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

நண்பர்கள் இணைந்தால் நமக்கும் சந்தோசம் தானே..! பின்னே நமக்கும் ஒரு அருமையான படம் கிடைக்குமே..!

Comments are closed.