‘தர்மதுரை’க்காக மூன்றாவது முறை இணைந்த சீனு ராமசாமி – விஜய்சேதுபதி..!

192

vijay-sethupathi-and-seenu-ramasamy
தென்மேற்கு பருவக்காற்று மூலம் விஜய்சேதுபதிக்கு கதாநாயகன் அந்தஸ்தை உருவாக்கி கொடுத்தவர் இயக்குனர் சீனுராமசாமி.. அடுத்ததாக இவர்கள் இருவரும் இணைந்து ‘இடம் பொருள் ஏவல்’ என்கிற படத்தையும் எடுத்து முடித்துவிட்டு ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர்.. இந்நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு படத்திலும் இணைய இருக்கின்றனர்.

சலீம் வெற்றித் திரைப்படத்திற்க்கு பிறகு ஸ்டுடியோ 9 புரொடக்சன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ‘தர்மதுரை’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.. இது, 199௦ல் ரஜினி நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படத்தின் டைட்டில். அந்தவகையில் ரஜினி பட டைட்டிலை முதன்முறையாக தனது படத்திற்கு பெற்றுள்ளார் விஜய்சேதுபதி. டிசம்பர் 15 ம் தேதி முதல் தொடங்க உள்ள இந்தப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Comments are closed.