
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவும் பாண்டிராஜூம் இணைந்து தயாரித்துள்ள ‘பசங்க-2’ படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.. இந்தப்படத்தில் சூர்யாவும் அமலாபாலும் முக்கியவேடத்தில் நடித்திருக்கிறார்கள்.. ஆனாலும் “இதில் நான் மிகவும் சாதாரணமாக நடித்துள்ளேன் இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான திரைப்படம்” என்கிறார் சூர்யா தன்னடக்கத்துடன்..
“என்னுடைய சிறுவயதில் நான் அனுபவித்த தருணங்கள் வேறு இப்போது இருக்கும் குழந்தைகள் அல்லது இன்னும் ஐந்து வருடத்திற்கு பின் வருங்கால சந்ததியினராக இருந்தாலும் சரி அவர்களின் உலகம் வேறு அதே போல் நகரங்களில் வாழும் குழந்தைக்கும் மற்றும் கிராமங்களில் வாழும் குழந்தைக்கும் உள்ள உலகங்கள் வேறு இந்தப்படத்தை பார்க்க வரும் குடும்பத்தினர், படம் பார்த்து விட்டு வீட்டிற்கு போகும்போது ஒரு நல்ல அறிவுரையை எடுத்துச் செல்வார்கள்” என்கிறார் சூர்யா பெருமிதத்துடன்.
அதுமட்டுமல்ல “இயக்குனர் பாண்டிராஜ் இரண்டு வருடம் குழந்தைகள் பற்றி ஆய்வு செய்து மற்றும் குழந்தைகளுடன் ஒன்றிணைந்து பல காட்சிகளை வடிவமைத்து அதை எங்களிடம் காண்பித்து இது போல கதையம்சம் கொண்ட திரைப்படம் உங்கள் மூலம் வரவேண்டும் என்றார்.. உண்மையிலே எங்கள் நிறுவனம் வாயிலாக மக்களை சென்றடைவது பெருமைக்குரிய விஷயமாக நினைக்கிறேன்” என்கிற சூர்யா,
Comments are closed.