‘வைகை எக்ஸ்பிரஸ்’ பட ரிலீஸில் ஆர்.கேவின் புதிய திட்டம்..!

221

RK
தியேட்டருக்கு படம் பார்க்க வராதவர்களையும் வரவழைக்க வேண்டும்.. அதற்கு என்ன பண்ணலாம் என ஆறுமாதமாக நடிகர் ஆர்.கே தீவிரமாக புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். பத்து பேர் விநியோகஸ்தர்கள் உள்ள சினிமாவுக்கு பத்து லட்சம் பேர் விநியோகஸ்தர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்ததன விளைவாக உருவானதுதான் இந்த புதிய திட்டம்.

தற்போது ஷாஜி கைலாஷின் இயக்கத்தில் ஆர்.கே நடித்துவரும் படம் தான் ‘வைகை எக்ஸ்பிரஸ்’. இந்தப்படத்திற்குத்தான் தமிழகத்தில் மட்டும் பத்தாயிரம் விநியோகஸ்தர்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார் ஆர்.கே. அவரின் இந்த முடிவிற்கு காரணம் என்னவாம்..? “சினிமாவில் இருக்கிற 10 விநியோகஸ்தர்களும் இப்போது பைனான்சியர் ஆகிவிட்டார்கள். சினிமா விநியோகஸ்தர்கள் 10 பேர் இருப்பது ஒரு லட்சமானால் வியாபார முறை மாறும்” என்கிறார் ஆர்.கே.

இப்போது யாரும் பொருட்கள் வாங்குவதற்கு வெளிய செல்வதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்தும் வீடு தேடி வருகிறது. “அதேபோல் நாமும் காலத்திற்கு ஏற்றார் போல் சினிமா வியாபார முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த விநியோக முறையை வைகை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்கிறேன்” என கூறியுள்ளார் ஆர்.கே.

Comments are closed.