உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசு ; நடிகர்சங்கம் தீவிரம்..!

204

20-1434787648-vishal-team-121-600
நடிகர் சங்கத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அணியினர் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் விதமாக, உறுப்பினர்களின் தற்போதைய நிலவரம் என்ன என்பதை அறியும் பொருட்டும், தாங்கள் பொறுப்பிற்கு வந்ததும் வரும் முதல் தீபாவாளி என்பதால் இந்த பண்டிகையை முன்னிட்டு சங்கத்தில் உள்ள அனைவருக்கும் தீபாவளி பரிசு வழங்கும் பொருட்டும் அனைவரையும் குழுக்களாக பிரிந்து சந்திக்க உள்ளனர்..

இந்த தீபாவளி பரிசானது (வேட்டி/சேலை, இனிப்பு) ரஜினி, கமல் உள்ளிட்ட கோடிகளில் சம்பளம் வாங்கு நடிகர்களானாலும், நூறு ரூபாய்களில் சம்பளம் வாங்கும் சாதாரண நாடக நடிகராக இருந்தாலும் ஒருவர் விடாமல் அனைவருக்கும் வழங்கப்படும். இத்துடன் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடக நடிகர்கள் பற்றிய விவரம் அறியும் கணக்கெடுப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்காக நடிகர் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் பத்து பேர் தனி குழுக்களாக மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, எல்லா மாவட்டங்களுக்கும் சென்று வருவதற்கான ஏற்பாடுகளும் நடக்கின்றன.

Comments are closed.