“விஷால்-கார்த்தி மீது இருந்த கோபத்தால்தான் அப்படி பேசினேன்” – சேரன் வருத்தம்..!

260

Seran Speech In Nadigar Sangam Election
நடந்து முடிந்த நடிகர்சங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக சரத்குமார் தலைமயிலான அறிமுக கூட்டம் ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தபோது, அதில் தனது ஆதரவை தெரிவிப்பதற்காக கலந்துகொண்ட சேரன், அப்போது கார்த்த்-விஷால் இருவரையும் தாக்கி பேசியது பலரையும் திடுக்கிட வைத்தது.. ஆனால் அதற்கு எந்தவித பதிலடியும் தராமல் இருவருமே பெருந்தன்மையுடன் அமைதி காத்தனர்.

தேர்தல் முடிந்து விஷால்-கார்த்தி இருவரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று இரவு சேரன், தான் பேசியது குறித்து வருத்தம் தெரிவித்து தன்னிலை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.. அதில் விஷால், கார்த்தி இருவரிடமும் படம் பண்ணுவதற்காக தான் கதை சொன்னதாகவும், இருவரும் பதிலே சொல்லாமல் தட்டிக்கழித்ததாகவும் அதனால் ஏற்பட்ட கோபத்தில் தான் தான் அவ்வாறு கடுமையாக பேசிவிட்டதாகவும் குறிப்பிட்டு, தனது செய்கைக்காக வருத்தம் தெரிவித்துள்ளார் சேரன்.

Comments are closed.