“இந்தமுறை மிஸ் பண்ண விரும்பவில்லை” – சூர்யா..!

214

I Didn't Miss The Chance This Time
தனது பிறந்தநாளையொட்டி நடிகர் சிவகுமார் கோவை வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் மகாபாரதத்தை 2 மணி 15 நிமிடங்களில் சுருக்கமாக உரை நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சூர்யா, கார்த்தி உட்பட குடுமபத்தினர் கலந்துகொண்டு கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தனர் .

இதறுகு சில வருடங்களுக்கு முன் ராமாயணத்தையும் இதேபோல இரண்டேகால் மணி நேரத்தில் இதே கல்லூரியில் வைத்து உரை நிகழ்ர்த்தினார் சிவகுமார். “அப்பா ராமயணம் உரை நிகழ்த்தும்போதே நாங்கள் வருவதாக இருந்தோம் ஆனால் எங்களால் அதற்கு எந்தவித தடங்கல்கள் இருக்கக்கூடாது என்று ஒதுங்கி விட்டோம். ஆனால் இந்த முறை நாங்களே விரும்பி வந்திருக்கிறோம்” என கூறினார் சூர்யா.

கார்த்தி பேசும்போது, “கல்லூரியில் உரை நிகழ்த்துவது, அதுவும் இரண்டேகால் மணி நேரம் மகாபாரத உரை நிகழ்த்துவது சாதாரண செயல் அல்ல இதற்காக அப்பா இரண்டு வருடம் கடுமையாக உழைத்து இருக்கிறார். அனைத்து மகாபாரத புத்தக பிரதிகளையும் வாசித்து மற்றும் நண்பர்களுடன் கலந்து உரையாடி தற்போது இந்த சாதனைக்கு தயாராகி வந்தள்ளார்” என கூறினார்.

ஜோதிகாவோ, “எனது மகன் தேவ் இப்போது தாத்தாவை(சிவகுமார்) போலவே அறிவாற்றலுடன் இருக்கிறான் அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” இந்த உரையை அவர் சிறப்பாக நிகழ்த்துவதற்கு நான் இங்கு எங்கள் குடும்பத்துடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

Comments are closed.