விஜய்சேதுபதியின் தயக்கத்தை உடைத்த நயன்தாரா..!

206

நயன்தாராவை கடத்திக்கொண்டு போக ஆசை என பகிரங்கமாக விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அறிவித்த விஜய்சேதுபதி, சொன்னபடி கடத்திக்கொண்டு போகாமல், அவருடன் ‘நானும் ரௌடி தான்’ படத்தில் ஜோடியாக நடித்து தனது ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். இன்று உந்தப்படம் வெளியாகியுள்ளது..

இந்தப்படத்தின் முதல் ஷூட்டிங்கின்போது நயன்தாராவை பார்த்து அவர் ஒரு சீனியர் என்பதால் பயந்தாராம் விஜய்சேதுபதி. ஆனால் நயன்தாராவுடன் பேச ஆரம்பித்த பத்தாவது நிமிடமே அவரது பயத்தை, தயக்கத்தை உடைத்தெறிந்து விட்டாராம் நயன்தாரா.

தான் ஒரு சீனியர் என்பதை எந்த ஒரு இடத்திலும் அவர் வெளிப்படுத்தவே இல்லையாம். படக்குழுவினர் ஆச்சர்யப்பட்ட இன்னொரு விஷயம், எந்த ஒரு ஷாட்டின் இடைவெளியின் போதும், நயன்தாரா கேரவன் பக்கம் கூட போகாமல் ஸ்பாட்டிலேயே அமர்ந்திருந்தாராம். மதிய உணவு பிரேக்கிற்கு மட்டும் தான் கேரவனுக்குள் செல்வாராம். அந்த அளவுக்கு தொழிலின் மீது மரியாதை கொண்டவர் நயன்தாரா என சந்தோஷப்பட்டுள்ளார்கள் படக்குழுவினர்.

Comments are closed.