
ஒருவாரம் முன்னதாகவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வெளியாகவேண்டிய நரேன்-சூரி நடித்த ‘கத்துக்குட்டி’ கடந்த வாரத்திற்கு முதல் வாரம் அறிவித்தபடி வெளியாக முடியவில்லை. ஒருவழியாக தடைகளை விலக்கி கொஞ்சம் அரைமனதோடுதான் படத்தை கடந்த வெள்ளியன்று திரையிட்டனர். ஆனால் படத்தில் சொல்லப்பட்டிருந்த மீத்தேன் விழிப்புணர்வு கருத்து மக்களிடம் பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தமிழக முதல்வர், தமிழகப்பகுதிகளில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என அறிவிப்பு செய்தது இந்த படத்திற்கு கூடுதல் பலமாகவும் பப்ளிசிட்டியாகவும், படத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் அமைந்தது. இதனால் ஏற்கனவே திரையிடப்பட்ட தியேட்டர்களின் எண்ணிக்கையில் இன்னும் 25 தியேட்டர்கள் கத்துக்குட்டி படத்திற்காக கூட்டப்பட்டதால் படக்குழுவினர் இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
Comments are closed.