காயத்ரியை கண்ணீர் விட வைத்த ‘மெல்லிசை’ விழா..!

214

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘ரம்மி’ ஆகிய படங்களில் விஜய்சேதுபதியுடன் நடித்த காயத்ரி, மூன்றாவது முறையாக அவருடன் மெல்லிசை என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளார். ரஞ்சித் ஜெயக்கொடி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது.

இந்த விழாவில் காயத்ரியின் பேசும் முறை வந்தபோது இரண்டு வரி பேசி முடிப்பதற்குள் அவருக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. பின்னர் இயக்குனரும் விஜய் சேதுபதியும் ஒருவாறு அவரை சமாதானப்படுத்தினர். இந்தப்படத்தில் மிகுந்த உழைப்பை காயத்ரி தந்திருக்கிறாராம். இந்தப்படம் தன்னை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும் என நம்புவதால் தான் அவருக்கு கண்கள் கலங்கிவிட்டன என இயக்குனர் ரஞ்சித் விளக்கம் சொன்னார்.

Comments are closed.