அக்-12ல் எஸ்.எஸ்.ஆரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியை நடத்தும் பாண்டவர் அணி..!

220

 

கடந்த வருடம் மறைந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் அக்-12ஆம் தேதி காமராஜர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை நாசர், விஷால் ஆகியோரின் பாண்டவர் அணி பொறுப்பேற்று நடத்துவதற்கு எஸ்.எஸ்.ஆரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளார்கள்.

எம்.ஜி.ஆரின் வலது கரமாக திகழ்ந்த எஸ்.எஸ்.ஆர் கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரார். அவரைப்போல அழகு தமிழை உச்சரிக்கும் இன்னொரு நடிகர் இல்லையென்றே சொல்லலாம். அதுமட்டுமல்ல நடிகர்சங்கத்தின் தலைவராக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு. இவரது மகன் கண்ணன், சரத்குமார் அணியில் இருந்துவரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் பொறுப்பு பாண்டவர் அணிக்கு கிடைத்துள்ளது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.