ஐந்து ஹீரோயின்களை காப்பாற்றினார் நமீதா

197

எல்லா நடிகைகளுக்கும் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. அப்படி கிடைத்தாலும் படம் ஓடுகிறதா என்பது வேறு விஷயம். தமிழ் நடிகைகளில் கடைசியாக சினேகா நடித்த ‘பவானி ஐ.பி.எஸ்’ படம் வெளியாகி இருந்தது. அதுகூட விஜயசாந்தி நடித்த ‘வைஜயந்தி ஐ.பி.எஸ்’ படத்தின் ரீமேக்தான்.

ரொம்பநாளாகவே இதேமாதிரி ஆசைதான் நமீதாவுக்கும். தானும் ஒரு படத்திலாவது போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துவிடவேண்டும் என்ற கனவில் இருந்தவருக்கு ‘இளமை ஊஞ்சல்’ என்ற படத்தின் மூலம் அவரது ஆசை நிறைவேறி இருக்கிறது. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நமீதா. இதற்காக தனது உடம்பை ஸ்லிம்மாக்கியதுடன் சண்டைக்காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சியும் பெற்றாராம் நமீதா.

அய்யர் ஐ.பி.எஸ்”, “பொள்ளாச்சி மாப்பிள்ளை” போன்ற படங்களை இயக்கிய அரிராஜன், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இந்தப்படத்தை இயக்குவதோடு, நடித்தும் வருகிறார். இந்தப்படத்தில் நமீதாவுடன் கிரண், ஆர்த்தி, மேக்னா நாயுடு, ஷிவானி சிங், கீர்த்தி சாவ்லா என இன்னும் ஐந்து ஹீரோயின்களும் நடிக்கிறார்கள். ஹீரோவாக ‘எங்கேயும் எப்போதும்’ ஷர்வானந்த், அனிஷ், மனீஷ், பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் கதைப்படி ஹீரோயின்கள் 5 பேரையும் தீவிரவாதிகள் கடத்துகின்றனர். போலீஸ் அதிகாரியான நமீதா எப்படி தீவிரவாதிகளிடமிருந்து அவர்களை மீட்கிறார் என்பது தான் கதை. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இந்தப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.