எடையை குறைத்த நமீதாவுக்கு மோகன்லால் தந்த பரிசு..!

225

 

ஒரு நீண்ட இடைவெளிவிட்டு ஒதுங்கியிருந்த ‘மச்சான்ஸ்’ நமீதாவுக்கு நிச்சயமாக அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ் வெற்றிகரமாக துவங்கியுள்ளது என்பதற்கான அறி குறி நேற்றே தெரிந்துவிட்டது.. சமீபத்தில் தனது உடலின் 20 கிலோ எடையை குறைத்து ஸ்லிம் பிட்டாகியுள்ள நமீதாவுக்கு ஜாக்பாட் பரிசாக மோகன்லாலின் ‘புலி முருகன்’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த செய்தி மோகன்லாலுடன் படப்பிடிப்பு தளத்தில் நமீதா எடுத்துக்கொண்ட செல்பி ஒன்று, சோஷியல் மீடியாவில் பரவியதன் மூலம் உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே ஐந்து வருடங்களுக்கு முன்பு ‘பிளாக் ஸ்டாலின்’ என்கிற ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டுமே நடித்துள்ளார் நமீதா. மலையாளத்தில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘புலி முருகன்’ படம் உருவாகி வருகிறது.. அதுமட்டுமல்ல, தென்னிநிதிய நட்சத்திரங்கள் நிறைய பேர் இந்தப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என படத்தின் இயக்குனர் வைசாக் ஏற்கனவே குறிப்பிட்டது போல பிரபு, கிஷோர், கமாலினி முகர்ஜி, இதோ இப்போது நமீதா என நட்சத்திர பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. வருகிற கிறிஸ்துமஸ் ட்ரீட்டாக இந்தப்படம் வெளியாக இருக்கிறது.

Comments are closed.