தமிழுக்காக ராம்சரண் – அல்லு அர்ஜூன் இணைந்த ‘மகதீரா’..!

233

தெலுங்கில் ராம்சரண் நடித்த ‘மகதீரா’ படம் தான் தமிழில் ‘மாவீரன்’ படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.. ராம்சரணுக்கு இங்கே ரசிகர்களையும் தேடித்தந்தது. ஆனால் இப்போது ராம்சரண் நடித்த இன்னொரு படமான ‘எவடு’என்கிற படம் தமிழில் ‘மகதீரா’ என்கிற பெயரிலேயே வெளியாக இருப்பது ஆச்சர்யமான ஒன்று..

இன்னொரு ஆச்சர்யம் இந்தப்படத்தில் அல்லு அர்ஜுன் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார்.. கதாநாயகியாக ஸ்ருதிஹாசனுடன் காஜல் அகர்வாலும் எமி ஜாக்சனும் கூட நடித்துள்ளார்கள். வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்தப்படம் ஒருவனுக்குள் இன்னொருவன் என்கிற வித்தியாசமான கதையை கொண்டது. மகேஷ்பாபு நடித்து சூப்பர்ஹிட்டாகிய செல்வந்தன் படத்தை சமீபத்தில் தெலுங்கில் வெளியான அதே நாளில் தமிழிலும் வெளியிட்டு வெற்றிபெற்ற பத்ரகாளி பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த மகதீராவையும் வெளியிடுகிறது.

Comments are closed.