“திரிசங்கு சொர்க்கத்தில் இருந்து விடுதலை பெற்றேன்” – மோகன் ராஜா நெகிழ்ச்சி..!

179

‘தனி ஒருவன்’ படத்தின் வெற்றி மற்ற யாரையும் விட படத்தின் இயக்குனர் மோகன்ராஜாவை மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருந்து மீட்டு, அவருக்கு உண்மையான சந்தோஷத்தையும் மனநிறைவையும் தந்துள்ளது. இதை ‘தனி ஒருவன்’ படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய ராஜாவின் உணர்ச்சிப்பூர்வமான பேச்சில் உணர முடிந்தது.

“இத்தனை படங்கள் டைரக்ட் செய்தும், அவை வெற்றிப்படங்களாக இருந்தாலும் கூட அவையெல்லாம் ரீமேக் செய்யப்பட்டு கிடைத்த வெற்றிதானே என்பதால் அந்த வெற்றி கொடுத்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் திரிசங்கு நிலையில் இருந்தேன்.. அந்த சூழல் தான் என்னை ‘தனி ஒருவன்’ படத்தை பார்த்து பார்த்து செதுக்க வைத்தது.. அதற்கு தகுந்த பலனும் கிடைத்துவிட்டது” என தனது மகிழ்ச்சியை ஆனந்த கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார் மோகன்ராஜா.

இப்போது இந்தப்படத்தை இந்தியிலும் தெலுங்கிலும் ரீமேக் செய்ய முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்களாம். அனேகமாக இந்தியில் சல்மான்கான் நடிப்பார் என்றும் அதை ஜெயம் ராஜாவே இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிறமொழிப்படங்களை ரீமேக் செய்துவந்த ராஜாவின் கதையை மற்ற மொழிக்காரர்கள் ரீமேக் செய்ய போட்டிபோடுவதை பார்க்கும்போது, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மோகன்ராஜா’ என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

Comments are closed.