“மோசமான இணையதளங்களை முடக்கவேண்டும்” – அரசுக்கு விஷால் வேண்டுகோள்..!

205

பகலில் நடிகர்சங்க தேர்தல் வேலைகள், இன்னொரு பக்கம் இரவுநேர படப்படிப்பு என தூங்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார் விஷால். இதற்கிடையே தனது ரசிகர் மன்றங்கள் மூலம், மாணவர்களுக்கு அவர்கள் படிப்பதற்கான சில உதவிகளையும் செய்து வருகிறார் விஷால். ஒரு சிறுவனையோ, சிறுமிகோ படிக்க உதவி செய்வதை விட சிறந்தது எதுவும் இல்லை என்கிற விஷால் கல்வி ஒன்றுதான் எதிர்காலத்தை பாதுகாக்கும் என்கிறார்..

அதுமட்டுமல்ல இன்று மாணவ சமுதாயங்களை திசைதிருப்பி சீரழிக்கும் மோசமான ஆபாச இணையதளங்களை முடக்கவேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்… அதுமட்டுமல்ல, எந்தமொழி திரைப்படங்கள் என்றாலும், அவற்றை முறையற்ற வகையில் திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களையும் முடக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments are closed.