ஆர்யா-25 கொண்டாட்டம் ; ஆகஸ்ட்-15 விஜய் டிவியில்..!

214

தமிழ்சினிமாவை பொறுத்தவரை ஆர்யாவுக்கு எந்த அளவுக்கு ஹீரோயின்களில் பலர் தோழிகளாக இருக்கிறார்களோ, அதே அளவுக்கு ஹீரோக்களும் நண்பர்களாக இருக்கிறார்கள். ஆர்யா தனது சினிமா வாழ்க்கையில் 25 படங்களில் நடித்து முடித்ததை கொண்டாடும் விதமாக இந்த நண்பர்கள் கூட்டம் விஜய் டிவியில் ‘இதுதாண்டா நட்பு’ என்கிற பெயரில் ‘ஆர்யா-25’ கொண்டாட்டத்தை அரங்கேற்றவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவின் திக் ப்ரெண்ட்ஸான விஷால், விஷ்ணு, விக்ராந்த், உதயநிதி உட்பட சில நண்பர்கள் சேர்ந்து ஆர்யாவை கலாட்டா பண்ணி, உண்டு இல்லையென்று ஆக்கவுள்ளார்கள்.. கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட்-15ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள்ளது.

Comments are closed.