
மறைந்த மாமேதை டாக்டர் அப்துல் கலாமுக்கு பலரும் கண்ணீர் அஞ்சலியும் இரங்கலும் செலுத்திவரும் வேளையில், உலகநாயகன் கமல், உருக்கமான வார்த்தைகளால் இரங்கற்பா அதவாது, இரங்கல் கவிதை ஒன்றை கனத்த மனதுடன் எழுதியுள்ளார்.
கலாம்களும் கமால்களும்
கமல்களும்
இலாதுபோகும்
நாள்வரும்
இருந்தபோது
செய்தவை
அனைத்துமே
கணிப்பது
ஹெவன்என்று
ஒருவனும்
பரம் என்று ஒருவனும்
ஜன்னத்தென்று ஒருவனும்
மாறி மாறிச் சொல்லினும்
இகத்திலேயவன்
நடந்த பாதையே
புகழ் பெறும்
நிரந்தரம் தேடுகின்ற
செருக்கணிந்த
மானுடர்
தொண்டருக்கடிப்பொடி
அம்மெய்யுணர்ந்த நாளிது
புகழைத் தலையிலேந்திடாது
பாதரட்சையாக்கிய
கலாம் சாஹெப்
என்பவர்க்கு
சலாம் கூறும் நாளிது.
இவ்வாறு கமல் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
Comments are closed.