உலகநாயகன் கமல் தனது பிறந்த தினமான இன்று முக்கியமான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை தி.நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அரசியலில் தனது அடுத்தடுத்த திட்டங்கள் என்ன என்பது குறித்து பகிர்ந்துகொண்டார். இதுபற்றி கமல் பேசியதாவது..
“கட்சியின் பெயரை இப்போது அறிவிக்க வேண்டிய அவசியமுமில்லை; அவசரமும் இல்லை. அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியிருக்கிறேன். கட்சி தொடங்கும் முன் அஸ்திவாரம் பலமாக இருக்கவே காத்திருக்கிறேன். சினிமா எடுக்கவே 6 மாதங்கள் முன் ஏற்பாடு செய்பவன் நான். இது அதனை விட பெரிய பணி. அஸ்திவாரத்தை வலுவாக அமைக்க வேண்டி இருப்பதால் சில அறிஞர்களுடன் பேசி வருகிறேன், அதற்கான பணிகள் நடந்து வருகிறது
தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் தற்போது பழுதடைந்துள்ளன. பழுதை சரிசெய்ய மக்கள் ஒன்று திரள வேண்டும். நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது. உங்கள் உதவியுடன் அது நடக்கும். பிரச்சனைகளுக்கு எதிரான நியாயமான குரலை வலுப்படுத்த வேண்டும்.
மக்கள் பிரச்னைகளை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். நான் சுற்றுப்பயணம் செய்துவது கற்றுக் கொள்வதற்காகத் தான். நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது கனவு. நல்லது செய்வதையும் பண்பறிந்து, ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்” என்றார் கமல்.
இந்த நிகழ்ச்சியில் கமல் ‘மய்யம் விசில்’ என்ற செயலியை (ஆப்) அறிமுகப்படுத்தி வைத்தார். இது வெறும் ஆப் அல்ல ஒரு பொது அரங்கம் இது நியாயத்திற்கான குரல் எழுப்பும் கருவியாக இருக்கும் என்றும் கமல் கூறினார்

Comments are closed.