
‘குரங்கு கையில் பூமாலை’ சிக்கியது போல என ஒரு சொலவடை ஒன்றை சொல்வார்களே.. அந்த வார்த்தையையே ஒரு படத்தின் டைட்டிலாக்கி விட்டார்கள். ஒரு அழகான இளம்பெண் ரோட்டில் நடந்துபோனால் நாலுபேர் நாலுவிதமான காதல் கணைகளை வீசத்தான் செய்வார்கள்.
இந்தப்படத்தின் கதாநாயகி சாந்திநிக்கும் அப்படி நாலுபேர் நான்குவிதமாக காதல் டார்ச்சர் கொடுகிறார்கள். ஒரு பெண்ணை காதலித்து ஏமாந்தவன், பலரை காதலித்து ஏமாற்றி அனுபவிக்க முயற்சி செய்கிறான்.. அவனது காதல் பார்வையும் இவள் மீது விழுகிறது.
ஒரே பெண்ணை காதலித்து அவளையே திருமணம் செய்ய நினைக்கும் இன்னொருத்தனும் காதல் பார்வை வீசுகிறான். அந்தப்பெண்ணின் முறைமாமன் வேறு ஒரு பக்கம் காதல் இம்சை அரசனாக மாறுகிறான். கல்யாணம் வேண்டாம், ஆனால் டைம் பாஸுக்கு ஒரு பெண் வேண்டும் என நினைப்பவனும் அவளுக்கு காதல் வலை விரிக்கவே செய்கிறான்.
யார் யாரிடம் ஏமாந்தார்கள் என்பதுதான் படத்தின் அடிநாதமாம். ஜி.கிருஷ்ணன் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். புதுமுகங்களான ஜெகதீஷ், கவுதம் கிருஷ்ணா ஆகியோர் கதாநாயகர்களாகவும் பிரவீண்குமார் என்பவர் வில்லனாகவும் நடிகிறார்கள். கதாநாயகிகளாக சாந்தினி மற்றும் நிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சிட்டிசன் இயக்குனர் சரவண சுப்பையா நடிக்கிறார்.
Comments are closed.