
ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிவிட்டு வெளியேவந்து படம் பண்ணும் பலரும் தங்களது முதல் படத்திலேயே வெற்றியை தந்துவிடுவதால் அவர்களுக்கென ஒரு பிராண்ட் தமிழ்சினிமாவில் உருவாகிவிட்டது.. முருகதாஸின் அசிஸ்டெண்ட்கள் என்றால் அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்காத குறைதான்.
இப்போது அவரது பாசறையில் இருந்து கிளம்பி வந்துள்ளார் சாதிக் கான்.. முருகதாஸிடம் ஹிந்தி கஜினி’யில் வேலைபார்த்தவர். அதுமட்டுமல்ல அஞ்சானில் லிங்குசாமியிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். தற்போது தொல்லைக்காட்சி படம் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.
காமெடி கலந்த கதையாக கையில் எடுத்திருக்கும் இவரது படத்தில் அஸ்வின் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 555 நாயகி சாந்தினி நடிக்கிறார்.. இது ஒரு கிராமத்து பின்னணியில் உருவாக இருக்கும் படம் என்பது ஆச்சர்யமான ஒன்று. இதற்காக தேனி, கும்பகோணம் பகுதிகளில் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
Comments are closed.