ரேஷ்மி மேனனுக்கு கரு.பழனியப்பன் அட்வைஸ்..!

229

 

பாபிசிம்ஹா கதாநாயகனாக நடித்துள்ள ‘உறுமீன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன், சி.வி.குமார், எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்ட பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். டில்லிபாபு தயாரித்துள்ள இந்தப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி என்பவர் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தில் மெட்ராஸ் கலையரசன் இன்னொரு ஹீரோவாக நடிக்க கதாநாயகியாக ரேஷ்மி மேனன் நடித்துள்ளார். இந்த விழாவில் பேசிய கரு.பழனியப்பன், “நடிகைகள் தங்களின் பெயருக்கு பின்னால் ஜாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதை தவிர்க்கவேண்டும். ரேஷ்மியும் தனது பெயரில் உள்ள மேனனை தூக்கிவிட்டால் மிகப்பெரிய நடிகையாக வலம் வரும் வாய்ப்பு இருக்கிறது” என அட்வைஸ் கொடுத்து பேசினார்.

Comments are closed.