
கமலிடம் நீண்டநாள் உதவி இயக்குனராக இருந்த ராஜேஷ் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘தூங்காவனம்’ என டைட்டிலை அறிவித்த கமல், இது த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறதே தவிர, திகில் படம் என்று இதை சொல்லமுடியாது என்கிறார்.
காரணம் திகில் படம் என்றால் பேய், பிசாசு வட்டத்துக்குள் போய்விடும்.. வேண்டுமானால் மனித உருவில் நடமாடும் சில பிசாசுகளை பற்றிய படம் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் என்கிறார் கமல்.. வரும் மே-26ஆம் தேதி ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார் கமல்.
விஸ்வரூபம் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சானு வர்கீஸ் தான் இந்தப்படத்தின் ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார். இசைக்கு ஜிப்ரான் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமோ..? தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக இந்தப்படத்தை தயாரிக்க இருக்கிறார் கமல்.
Comments are closed.