
மகன் மன வருத்தப்படுவதை பார்த்து, எந்த தந்தையால் தான் பொறுத்துக்கொண்டு இருக்கமுடியும்..? கடந்த இரண்டு வருடங்களாக தனது மகன் சிம்புவின் படங்கள் ரிலீசாகாமல் இருப்பதை டி.ராஜேந்தரும் வேதனையுடன் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார். அதிலும் குறிப்பாக ‘வாலு’ படத்தின் ரிலீஸ் தேதியாக எத்தனையோ நாட்கள் சொல்லி சொல்லி மாற்றப்பட்ட காயம் அவருக்கும் இருக்கும் தானே..
அதனால் தான் மெட்ரோ ரயில் திட்டம் போல நீண்டகால தயாரிப்பாக இருந்த ‘வாலு’ படத்தை சிக்கலில் இருந்து விடுவிக்க, தானே களத்தில் குதித்துள்ளார் டி.ஆர். முதல் கட்டமாக படத்தை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியிடம் இருந்து, படத்தை தானே டேக் ஓவர் பண்ணியுள்ளார். அடுத்தகட்டமாக படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை மிகப்பெரிய தொகைக்கு சன் டிவிக்கு விற்றுள்ளார்.
படத்தை ரிலீஸ் பண்ணும் வேலைகளில் துரித நடவடிக்கைகள் எடுத்து வரும் டி.ஆர் இந்த மேமாதமே படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார். ‘வாலு’ படத்துடன் எந்தப்படம் மோதலுக்கு வருகிறது என்பதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. கடைசி நேரத்தில் ஏற்கனவே சொன்னபடி, அது மே-9ஆம் தேதியாக கூட இருக்கலாம்.
Comments are closed.