
சத்தமே இல்லாமல் கொலை செய்வார்கள் என கேள்விப்பட்டிருக்கிறோம்.. ஆனால் இங்கே ஒருவன் சத்தத்தை வைத்து கொலைசெய்து அதிர்ச்சியளிக்க வருகிறான் ‘நெடுமன்’ என்கிற படத்தில். படத்தை இயக்குவதோடு ‘நெடுமன்’ பாத்திரத்தில் நடித்திருக்கிறார் இயக்குநர் நாகமானிசி. இந்திய துபாய் உலக அழகியான ஜோன்ஸ்னா தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
இரண்டாவது கதாநாயகியாக தேவசூர்யா நடித்துள்ளார். மறைந்த நடிகர் ‘காதல்’ தண்டபாணி நடித்து டப்பிங் பேசிய கடைசிப் படம் இந்த நெடுமன் தானாம். ஓசை மூலம் கொலை செய்பவனை ஓசையின்றி பிடிக்க முயலும் போலீசின் துரத்தல் சுவாரஸ்யம் என்றால், கூடவே பேயின் ஆட்டமும் திகிலூட்ட இருக்கிறதாம்.
Comments are closed.