
கலைஞர் டிவியின் ஸ்டார் நிகழ்ச்சி என சொல்லப்படும் ‘மானாட மயிலாட’ டான்ஸ் ரியாலிட்டி ஷோ சீசன்-1௦ஐ தொட்டுவிட்டது.. இத்தனை வருடங்களாக இந்த நிகழ்ச்சியை புதுப்புது மாற்றங்களுடன் விறுவிறுப்பு குறையாமல் நடத்தி சென்று கொண்டிருக்கிறார் கலா மாஸ்டர்.
அதற்கு மேலும் கௌரவம் சேர்க்கும் விதமாக, தற்போது கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெற்றிருக்கிறது இந்த ‘மானாட மயிலாட-சீசன் 1௦’. உலக அளவில் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் கின்னஸில் இடம்பிடித்திருப்பது இந்த நிகழ்ச்சி தானாம்.
“முதன்முதலில் இந்த ஷோவை ஆரம்பித்தபோது இதற்கு ‘மானாட மயிலாட’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்களே என நான் கூட தயங்கினேன்.. ஆனால் இன்று அது பிரான்ட் நேம் போல மாறி, ஒவ்வொரு குடும்பத்திலும் அனைவரும் தவறாமல் உச்சரிக்கும் பெயராகவும் மாறிவிட்டது” என பெருமிதப்படுகிறார் கலா மாஸ்டர்.
Comments are closed.