எட்டு வருடம் கழித்து செல்வராகவன் படத்தில் மீண்டும் ‘த்ரிஷா’..!

208

தயாரிப்பாளர் வருன்மணினுடன் திருமணம் நிச்சயமாகிவிட்ட சூழ்நிலையில் த்ரிஷா படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்வார் என நினைத்தால், இப்போது சிம்புவை ஹீரோவாக வைத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.. சில நாட்களாக யூகமாக ஓடிக்கொண்டிருந்த இந்த தகவலை “ஜீனியஸுடன் மீண்டும் இணைவதில் பெருமைப்படுகிறேன்” என ட்வீட் போட்டு த்ரிஷாவே உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இந்த செய்தியை நீங்கள் படிக்கும் இந்த தினம் ஒரு முக்கியமான நாள். காரணம் செல்வராகவன் – த்ரிஷா கூட்டணியில் தெலுங்கில் உருவான ‘ஆடவாரி மாட்லாக்கு அர்த்தாலே வேறுலே’ படம் ரிலீஸாகி இன்று ஒன்பதாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்தப்படம் தான் தமிழில் ‘யாரடி நீ மோகினி’ ஆக ரீமேக் ஆனது. ஆக எட்டு வருடங்கள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைவது என்பது அபூர்வமான நிகழ்வுதான்.

Comments are closed.