ராஜீவ் மேனனை கவர்ந்த விஜய்சேதுபதி – பாபிசிம்ஹா.!

199

இந்திய சினிமாவின் முக்கிய கேமராமேன்களை பட்டியலிடும்போது ராஜீவ் மேனனுக்கும் ஒரு இடம் நிச்சயம் உண்டு. விளம்பர பட உலகில் தனது ஆதிக்கத்தை வலுவாக நிலைநாட்டிய ராஜீவ் மேனனின் பங்கு சினிமாவை பொறுத்தவரை குறைவாகவே இருந்தாலும் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்க கூடியது. மணிரத்னம் தனது படங்களில் சொல்ல விரும்பியதை, சிலகாலம் அவரது கண்களாக இருந்து காட்சிப்படுத்தி தந்த ராஜீவ் மேனன், இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக ‘மைண்ட்ஸ்கிரீன்’ பிலிம் இன்ஸ்ட்டியூட் என்ற பெயரில் சினிமா பயிற்சி கல்லூரி நடத்தி வரும் ராஜீவ் மேனன், மீண்டும் டைரக்சனுக்கு திரும்புகிறார். ஆனால் இந்தமுறை படம் இயக்கப்போவது இங்கல்ல.. இந்தியில் தான். அதற்காக கைவசம் ஆறு ஸ்கிரிப்ட்டுகளை வைத்திருக்கிறார் ராஜீவ் மேனன்.

தவிர, தமிழ் சினிமா கண்டுவரும் மகத்தான மாற்றங்களையும் இடைவிடாது கவனித்துக்கொண்டுதான் வருகிறார். அந்த வகையில் தங்களது வித்தியாசமான நடிப்பால் தன்னை கவர்ந்தவர்கள் என விஜய்சேதுபதியையும், பாபி சிம்ஹாவையும் குறிப்பிடுகிறார் ராஜீவ் மேனன்.

Comments are closed.