ஸ்ருதிஹாசன் மீதான புகார் வாபஸ்..!

169

கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் திடீரென விலகினார்.. இதனால் அந்தப்படத்தை தயாரிக்கும் பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம், ஸ்ருதிஹாசன் மற்ற எந்த படங்களிலும் நடிக்க புதிய ஒப்பந்தம் போடக்கூடாது என நீதிமன்றம் மூலம் தற்காலிகமாக தடை வாங்கியது. இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்திற்கும் எடுத்துச்செல்லப்பட்டது.

சரத் குமார், கலைப்புலி தாணு என சங்கத்தலைவர்கள் ஒன்று கூடி பேசியதில் சுமூகமான தீர்வு ஏற்பட்டதால் தான் ஸ்ருதிஹாசன் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டுள்ளது பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம்.. இனி வரும் காலங்களில் இதுபோன்று விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நடிகர், நடிகைகள் தவிர்க்க வேண்டும் என இதுகுறித்து இரு சங்கங்களும் அறிவுறுத்தியுள்ளன.

Comments are closed.