ஜெயகாந்தனுக்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இசைஞானி..!

214

இசைஞானி இளையராஜா அவரது அண்ணன் பாஸ்கர் மற்றும் பாரதிராஜாவோடு முதன் முதலாக வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது முதலில் போய் நின்ற இடம் எழுத்தாளர் ஜெயகாந்தனின் வீடுதான் “நாங்கள் உங்களை நம்பிதான் வந்திருக்கிறோம் என்று அவர்கள் சொன்ன போது “என்னை நம்பி எப்படி நீங்கள் வரலாம்” என்று கேட்டு இளையராஜா மனதில் நம்பிக்கை விதையை விதைத்தவர் ஜெயகாந்தன்.

நேற்று முன் தினம் காலமான எழுத்தாளர் ஜெயகாந்தனின் மறைவு இளையராஜாவின் மனதை மிகவும் பாதித்துள்ளது. அதனால் ஜெயகாந்தனின் ஆத்மா சாந்தி அடைய நேற்று மாலை திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டார்.

“தன்னுடைய எழுத்துக்கள் மூலம் எளிய மனிதர்களின் குரலை ஒலிக்கச்செய்தவர். தமிழ் எழுத்துலகில் மட்டுமில்லாமல் திரையுலகிலும் தன்னுடைய அடையாளத்தை பதித்தவர் ஜேகே. தமிழர்களின் தலை நிமிர்வு ஜெயகாந்தன். அவர் என்றென்றும் தமிழர்களின் நெஞ்சத்தில் நீங்காமல் நிலைத்து நிற்பார்” என்று நெகிழ்கிறார் இளையராஜா.

Comments are closed.