ஹேப்பி பர்த்டே ட்டூ பிரகாஷ்ராஜ்..!

210

நடிப்பில் அகோர பசி கொண்டவர் என்று சொல்வார்களே அது நடிகர் பிரகாஷ்ராஜுக்கு நன்றாகவே பொருந்தும். ஒரு சாதாராண, சின்ன பட்ஜெட் படத்தில் இவர் நடிக்கிறார் என்றால் அந்தப்படத்தின் வியாபாரமே வேறு கலருக்கு மாறிவிடும். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம் என அனைத்திலும் இறங்கி வெற்றியோ, தோல்வியோ அதன் அடி ஆழம் வரை சென்று பார்க்கும் தைரியமும் பிரகாஷ்ராஜின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி..

அந்த தைரியம் தான் தற்போது அவரை சீரியஸாக மும்மொழிகளில் ஒரே நேரத்தில் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ என்கிற மலையாள படத்தை டைரக்ட் பண்ண வைத்தது. இப்போது இந்தியிலும் கூட அதை ரீமேக் செய்யும் முயற்சியில் இருக்கிறார்.

பல படங்களில் நடிகைவந்த வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டுத்தான் இந்த முயற்சியிலே அவர் இறங்கினார். ஆனால் பிரகாஷ்ராஜ் அதையும் வெற்றிகரமாக செய்து முடிப்பார் என்பதில் சந்தேகமே வேண்டாம்.. இன்று பிறந்தநாள் காணும் பிரகாஷ்ராஜுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.