
நீண்ட நாட்களாகவே பூனைக்கு மணிகட்டுவோம் என சொல்லிவந்தும் அதை இதுநாள் வரை சரியாக யாரும் செயல்படுத்தவில்லை.. இந்தமுறை தயாரிப்பாளர் சங்கத்தலைவராக பொறுப்பேற்றிருக்கும் கலைப்புலி தாணு அதற்கான அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார். சின்ன பட்ஜெட் படங்களை காப்பாற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார் தாணு.
இனி டாப் ரேங்க் நடிகர்களின் படங்கள், அதாவது பெரிய பட்ஜெட் படங்கள் இனி வருடத்தில், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என முக்கியமான குறிப்பிட்ட பத்து நாட்களில் மட்டுமே வெளியாக வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. 15 கோடி பட்ஜெட்டை தாண்டி தயாராகும் படங்கள் எல்லாமே பெரிய படங்கள் என்கிற பட்டியலில் இடம்பெறுகின்றன.
அந்தவகையில் வாரத்திற்கு மூன்று சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல க்யூப், யு.எப்.ஓ முறையில் படங்கள் ஒளிபரப்பப்படுவதும் தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுக்குள் கொண்டுவரப்பபடுமாம். சிறிய படங்களை காப்பாற்றும் முயற்சி என்றாலும் பல பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாகும்போது அவற்றின் வசூலும் பாதிக்கப்படும் என்றே பலர் கருதுகிறார்கள்..
Comments are closed.