லாஸ் ஏஞ்சல்ஸில் ஏழு மாதங்கள் பாக்ஸிங் பயிற்சி எடுத்த மாதவன்

204

மாதவனுக்கு என்ன ஆச்சு? வேட்டை படம் வெளியாகி கிட்டத்தட்ட 21 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், தமிழ்சினிமா பக்கமே தலை காட்டாமல் அப்படி என்ன செய்கிறார் என யாரும் கொந்தளிக்கவேண்டாம். மாதவன் எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். அதற்கேற்ற மாதிரி ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்த மாதவன் அங்கே தனது முதல் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இப்போது தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாராகவிருக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் மாதவன். இந்தப்படத்தில் மாதவனுக்கு ரிட்டையர்டு பாக்ஸர் கேரக்டர். இதற்காக கடந்த ஏழு மாதங்களாக லாஸ் ஏஞ்சல்ஸில் ஆண்டனி, அலெக்ஸாண்டர் என இரண்டு வீரர்களிடம் குத்துச்சண்டை பயிற்சி எடுத்திருக்கிறார் மாதவன். தமிழில் துரோகி படத்தை இயக்கிய சுதா கோங்குரா தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இப்போது சொல்லுங்கள் மாதவன் பதுங்கியிருப்பது பாய்வதற்குத்தானே.?

1 Comment
  1. beauty business says

    902026 566436magnificent post, very informative. I wonder why the other specialists of this sector do not notice this. You should continue your writing. Im positive, youve a terrific readers base already! 878251

Leave A Reply

Your email address will not be published.