கலைஞர்களை நீங்கள் உருவாக்கிவிடலாம். ஆனால் மேதைகள் கடவுளால் படைக்கப்படுகிறார்கள் என்றார் அறிஞர் ஜான் கீட்ஸ். அந்தவிதத்தில் கர்நாடக இசை மரபிலேயே அதுவரை இல்லாத மேண்டலின் என்ற வாத்தியத்தை தன் ஐந்தாவது வயதிலேயே கற்கத் தொடங்கி, 9 வயதிலேயே மிகப்பெரிய இசை ஜாம்பவான்களுக்கு சமமாக இசை நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு மேதமை பெற்றவர். கர்நாடக இசையை, ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசை ஆகியவற்றுடன் இணைத்து உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர் மேண்டலின் ஸ்ரீநிவாஸ்.
பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாதமி விருது போன்ற மிக உயரிய விருதுகள் அவரைத்தேடி வந்தன. கடந்த வருடம் செப்டம்பர் மாதம மறைந்த மறைந்த மேண்டலின் ஸ்ரீநிவாஸ் 45 ஆண்டுகளே வாழ்ந்திருந்தாலும் இசை உலகில் அவர் செய்திருக்கும் புதுமைகள், இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் வியந்து பேசப்படும்.
அப்படிப்பட்ட மகா கலைஞனை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் விதமாக அவரது தம்பியான மேண்டலின் ராஜேஷும், அவர் தனது தம்பி ஸ்தானத்தில் வைத்து நடத்திய இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தும் இணைந்து அவரது பிறந்த நாளான பிப்-28ல் லைவ் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார்கள். பிரபல இசைக்கலைஞர்கள் பங்கு பெறும் இந்த விழாவில் கமல் மற்றும் இசைஞானி இளையராஜா உட்பட பல பிரபலங்கள் பங்கேற்று மறைந்த ஸ்ரீநிவாசிற்கு தங்களது மரியாதையை செலுத்த இருக்கிறார்கள்.
Comments are closed.