பாலகிருஷ்ணாவின் பேஸ்புக் பக்கத்தை துவங்கி வைத்தார் த்ரிஷா..!

216

தெலுங்கு சினிமாவில் இன்றும் கர்ஜிக்கும் சிங்கமாக உலா வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் கோலோச்சி வரும் இவர் தனது நூறாவது படத்தையும் தொட்டே இருக்கிறார். தற்போது பாலகிருஷ்ணாவின் லேட்டஸ்ட் விஷயங்களை ரசிகர்களுக்கு உடனுக்குடன் அப்டேட் செய்யும் விதமாக ‘நந்தமூரி சிகரம்’ என்கிற பேஸ்புக் புக்கம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.

இந்த பேஸ்புக் பக்கத்தை நடிகை த்ரிஷா தனது கையால் துவங்கி வைத்தார்.  பால்கிருஷான்வின் ‘லயன்’ படத்தில் வருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, பாலகிருஷ்ணாவின் இத்தனை ஆண்டுகால சாதனைகளை எல்லாம் தொகுத்து ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றையும் இதேபெயரில் வெளியிட முடிவு செய்திருக்கிறார் பாலகிருஷ்ணாவின் உதவும் கரங்கள் அமைப்பை நடத்திவரும் அனந்தபுரம் ஜெகன்.

பாலகிருஷ்ணாவின் சாதனைகள் மற்றும் அவருடனான அனுபவங்கள் பற்றி பிரபலங்களும் மக்களும் தங்கள் கருத்தை இதில் பதிவு செய்ய இருக்கிறார்கள். இந்த புத்தகத்திற்கான வேலைகளை ஏற்கனவே துவங்கிவிட்ட பாலகிருஷ்ணாவின் மனைவி வசுந்தரா, இதன் முதல் பக்கத்தையும் எழுதியுள்ளார். பாலகிருஷ்ணா நடிக்க இருக்கும் 1௦௦வது பட துவக்க விழாவில் இந்த புத்தகத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

Comments are closed.