‘வெத்துவேட்டு’ன்னு கூப்பிடாம பாத்துக்குங்க” – இயக்குனர் சரண் அட்வைஸ்..!

238

 

‘கோரிப்பளையம்’ உட்பட சில படங்களில் நடித்து ஓரளவு ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஹரீஷ்.. இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ‘வெத்து வேட்டு’. மணிபாரதி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் மாளவிகா மேனன் கதாநாயகியாக நடிக்க தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். கோவையை சேர்ந்த நான்கு நண்பர்கள் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்கள்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் சரண், “இந்தப்படத்தின் இயக்குனர் எதிர்கொள்ளப்போகும் சிரமம் என்னவாக இருக்குமென்றால், படம் வெற்றிகரமாக ஓடியபின், இவரை எல்லோரும் ‘வெத்துவேட்டு’ இயக்குனர் என அழைக்கத்தான் செய்வார்கள். அதனால் அவர் அடுத்து கச்சிதமான ஒரு டைட்டிலை வைத்து அடுத்த படத்தை எடுத்து தனது அடைமொழியாக மாற்றிக்கொள்ள வேண்டும்” என ஜாலியாக குறிப்பிட்டு படம் வெற்றி பெரும் என்பதையும் சூசகமாக குறிப்பிட்டார்.

Comments are closed.