“நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு” – பிந்துமாதவி சந்தோஷ சிணுங்கல்..!

320

எந்த ஒரு மொபைல்போனின் கஸ்டமர் கேரை தொடர்புகொண்டாலும் தவிர்க்க முடியாமல் நம் காதில் விழும் வாக்கியம் ‘தமிழுக்கு எண் -1ஐ அழுத்தவும்’.. ‘எங்கேயும் எப்போதும்’ சரவணனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ராம்பிரகாஷ் ராயப்பா., இயக்கியுள்ள படத்தின் டைட்டிலும் இதுதான்.

இந்தப்படத்தில் நகுலும் அட்டகத்தி’ தினேஷும் ஹீரோவாக நடிக்க கதாநாயகியாக நடிக்கிறார் பிந்துமாதவி. இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். எதிர்நீச்சல் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

பூமியை நோக்கிவரும் காந்தப்புயலால் தகவல் தொழில்நுட்பமும் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களும் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்கிற புதுமையான கதைக்களத்தை இந்தப்படத்திற்காக எடுத்துள்ளார் இயக்குனர் ராயப்பா.. இந்தப்படம் வரும் 2௦ஆம் தேதி வெளியாவதால் அது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் பேசிய பிந்துமாதவி, “வரும்போதே ஒருத்தர் சொல்லி அனுப்பினார், ஏதாவது கான்ட்ரவர்ஸியா பேசுங்கன்னு.. கடந்த ஒரு வருஷமா எந்த ஒரு கான்ட்ரவர்ஸியும் இல்லாம நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு.. அப்புறம் ஏன்?” என செல்லமாக சிணுங்கினார். மேலும் படத்தை வெளியிடும் உதயநிதியிடம் “சார் படம் ரெடியானதுல இருந்து பார்க்கனும்னு ஆர்வமா இருக்கேன்.. படம் போட்டு காட்டுவீங்களா” என கோரிக்கை வைக்க, உதயநிதியும் “நிச்சயமாக… படம் ரிலீசானதும் எப்படியும் ஷோ உண்டு” என குறும்பாக பதிலளித்தார்.

Comments are closed.